Breaking News

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை - புகார் மையம் திறப்பு மாவட்ட கலெக்டர் ஞானசேகரன் ஆய்வு

திருவண்ணாமலை, மார்ச் 10-
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தி.மலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் புகார் மையத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி முன்னிலையில், கலெக்டர் அ.ஞானசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் வரும் மே மாதம் 16-ஆம் தேதி
நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக முதல் தளத்தில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறை மற்றும் புகார் மையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தினை 24 மணி நேரமும் (04175) 232043 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தரை தளத்தில் வாக்காளர் சேவை மையம் முன்பு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016 தொடர்பாக வைக்கப்பட்டுள்ள தேர்தல் அட்டவனை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விவரம் தொடர்பாக வைக்கப்பட்டுள்ள பலகையினை கலெக்டர் நேற்று பார்வையிட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் (062) செங்கம் (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அலுவலகம் தரை தளத்தில் நுழைவு வாயில் இருந்து முதல் வரிசையில் வலது பக்கமும், (064) கீழ்பென்னாத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் உதவி ஆணையர் (கலால்) அலுவலகம் தரை தளத்தில் நுழைவு வாயில் இருந்து முதல் வரிசையில் இடது பக்கமும், (066) போளுர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம் தரை தளத்தில் நுழைவு வாயில் இருந்து முதல் வரிசையில் இடது பக்கமும், (067) ஆரணி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் தரை தளத்தில் நுழைவு வாயில் இருந்து முதல் வரிசையில் இடது பக்கமும், (065) கலசபாக்கம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் மூன்றாவது வரிசையில் வலது பக்கமும், (069) வந்தவாசி (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகம் இரண்டாம் தளத்தில் மூன்றாவது வரிசையில் இடது பக்கமும் அமைந்துள்ளது. மேலும், (063) திருவண்ணாமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகம் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், (068) செய்யார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் அலுவலகம் செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்திலும் அமைந்துள்ளது.

No comments

Thank you for your comments