Breaking News

திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் சூரிய கிரகணத்தையட்டி பிரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி

திருவண்ணாமலை, மார்ச் 10-
திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தின் முக்கிய திருவிழாவின்போது ஆலய குளங்கள் மற்றும் தென்பெண்ணை செயயாறு கவுதம நதி போன்றவற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். மேலும் சூரிய சந்திர கிரகணத்தின்போது அண்ணாமலையார் ஆலயத்தில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும்.

இதன்படி சூரிய கிரகணத்தையட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. அருள்மிகு அண்ணாமலையார்
ஆலயத்தில் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும்போது பரிகாரமாக தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். சூரிய கிரகணத்தையட்டி தீர்த்தவாரி நடைபெற்றது.

சூரய கிரகணம் தொடங்கியநேரமான காலை 6.20 மணியளவில் அண்ணாமலையார் கோவிலில் பிரம்ம தீர்த்தத்தில் சூல வடிவான சந்திரசேகரருக்கு சிவாச்சாரியார்கள் தீர்த்தவாரி நடத்தினர். பாதுகாப்பு கருதி பிரம்ம தீர்த்தத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கிரகணத்தின்போது அண்ணாமலையார் கோவிலில் நடை அடைக்கும் வழக்கம் கிடையாது. இதனால்  வழக்கம்போல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

No comments

Thank you for your comments