சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு வையம்பட்டி அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
சென்னை, மார்ச் 26-
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு வையம்பட்டி அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு வையம்பட்டி அ.தி.மு.க. நிர்வாகி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுயுள்ளது. தீக்குளிக்க முயன்ற வையம்பட்டி அதிமுக நிர்வாகி ராமசாமியை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல்வர் ஜெயலலிதா வீட்டின் அருகே கையில் மண்ணெண்ணை கேனுடன் வந்த அதிமுக நிர்வாகி ராமசாமி திடீரென முதல்வரை பாராட்டி முழக்கமிட்டார்.
பின்னர் போலீசார் அவரை நோக்கி ஓடியபோது ராமசாமி தனது உடம்பில் மண்ணெண்ணெயை ஊற்றினார். உடனே அவரைத் தடுத்து நிறுத்திய போலீசார் ராமசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜெயலலிதா கடந்த சில தினங்களாக போயஸ்கார்டனில் வேட்பாளர்களை நேர்காணல் செய்து வரும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் தற்கொலைக்கு முயற்சி செய்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments
Thank you for your comments