Breaking News

விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் - தே.மு.தி.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்: பிரேமலதா பேட்டி

விஜயகாந்த் பிரசாரத்திற்கு வருவார் - தே.மு.தி.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்: பிரேமலதா பேட்டிநெல்லை, மார்ச் 26–

நெல்லையில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. மகளிர் அணி மாநில செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டு பேசினார். அவர் இன்று காலை நெல்லையப்பர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பலமுனை போட்டி ஆரோக்கியமானது. ஒட்டுமொத்த மக்களின் ஆதரவும் தே.மு.தி.க.– மக்கள் நல கூட்டணிக்கு உள்ளது. அ.தி.மு.க.– தி.மு.க. ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை. 

விஜயகாந்த் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை வகுத்துள்ளார். பெண்கள் முன்னேற்றம், தமிழக தன்னிறைவு என 2 தேர்தல் அறிக்கைகளை விஜயகாந்த வெளியிட்டுள்ளார். இன்னும் 2 தேர்தல் அறிக்கைகள் தயாராகிறது. தே.மு.தி.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

வேட்பாளர் அறிவிப்பிற்கு பின் விஜயகாந்த் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வார். டெல்லியில் கெஜ்ரிவாலுக்கு வெற்றியை தந்தது போல தமிழகத்தில் விஜயகாந்திற்கு மக்கள் வெற்றியை தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

No comments

Thank you for your comments