Breaking News

ஆதரவற்ற சிறுவர்களை போராளியாக தயார் செய்யும் ஐ.எஸ்!

உலகம், மார்ச் 4-
ஆதரவற்ற சிறுவர்களை திரட்டி ஐ.எஸ்.தீவிவரவாத குழுவினர் போராளிகளாக தயார் செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக ரஷ்யா உள்ளிட்ட கூட்டுப்படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றது.
சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்ள ஐ.எஸ். முகாம்களை
கூட்டுப்படைகளின் விமானங்கள் குடுண்டுகளால் தகர்த்து வருகின்றது. இந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பு அடுத்த கட்ட திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்ட காட்சி ஒன்று தற்போது சமூக ஆர்வலர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் சிரியா மற்றும் ஈராக் பகுதிகளில் உள்ள ஆதரவற்ற சிறுவர்களை சிறுவர்களை திரட்டி அவர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக தெரிய வந்துள்ளது. 

விளையாட்டு பொம்மைகளை வைத்து விளையாட வேண்டிய சிறுவர்களை போர் பயிற்சிக்கு அந்த குழுவினர் தயார் படுத்தி வருகின்றனர். பெரும்பாலானா சிறுவர்களை வலுக்கட்டாயமாக பயிற்சியில் ஈடுபடுத்துவதும் அந்த காட்சியில் தெரிய வந்துள்ளது. 

ஆதரவற்ற சிறுவர்களை அக்கறையுடன் பார்த்துக்கொள்வதாக குறிப்பிடும் அந்த காட்சியில், சிறுவர்கள் போர் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஐ.எஸ்.குழுவினர் சிறுவர்களுக்கு ஆயுத பயிற்சி அளிப்பது இது முறையல்ல, இதற்கு முன்னரும் இதுபோன்ற காட்சிகளை அந்த குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக ஜூனியர் ஜிகாதி என அழைக்கப்படும் பிரித்தானிய சிறுவனை வைத்து வெடிகுண்டை வெடிக்க செய்த காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments