கேரளாவிலும் ஒரே கட்டமாக மே 16-ல் சட்டசபை தேர்தல்; மே 19- வாக்கு எண்ணிக்கை
திருவனந்தபுரம், மார்ச் 4-
தமிழகம், புதுவையுடன் கேரளாவிலும் ஒரே கட்டமாக மே
16-ந் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்படும்; மே 19-ந் தேதி வாக்குகள்
எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5
மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி
டெல்லியில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
அஸ்ஸாமில் 2 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாகவும்
தேர்தல் நடத்தப்பட உள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல்
நடைபெற உள்ளது.
கேரளாவில் மொத்தம் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 16-ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
No comments
Thank you for your comments