Breaking News

பெண் கவுன்சிலருக்கு பளார்

பெங்களூரு, மார்ச் 14-
கர்நாடக மாநிலத்தில் பெண் கவுன்சிலர் ஒருவரை ஆண் கவுன்சிலர் கன்னத்தில் அறைந்தது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

கர்நாடகா மாநிலம் கொப்பல் என்ற இடத்தில் கொப்பல் நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
நடைபெற்றது. இதில் மதச்சார்பற்ற கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பா.ஜ.வைச் சேர்ந்தவரை ஆதரிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை ஆதரித்து மதச்சார்பற்ற கட்சியினர் ஒரு சேர கையை தூக்கினர்.
ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட சுயேட்சை பெண் கவுன்சிலர் விஜயா என்பவர் கையை தூக்காமல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதச்சார்பற்ற கட்சியைச் சேர்ந்த கோதிஹால் என்பவர் அந்த பெண் கவுன்சிலரின் கன்னத்தில் சரமாரியாக அறைந்துள்ளார். 

பின்னர் அங்கிருந்தவர்கள் கோதிஹாலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த காட்சி தொடர்பான வீடியோ தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. பெண் கவுன்சிலர் கொடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு மதச்சார்பற்ற கட்சியின் மூத்த தலைவர் டேனிஷ் அலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments