Breaking News

14 நாள் சமாதி நிலையில் இருந்த நபர் உயிருடன் எழுந்து வந்ததால் பரபரப்பு

பீகார், மார்ச் 14-
பீகாரில் 15 அடி ஆழ சவக்குழிக்குள் 14 நாள் சமாதி நிலையில் இருந்த நபர் உயிருடன் எழுந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  மாதேபுரா மாவட்டத்தில் உள்ள பட்காமா கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் பாபா என்பவர் சமாதி நிலையை அடைய விரும்புவதாக கூறியுள்ளார். 
இதையடுத்து 10 அடி நீளம், 10 அடி அகலம் மற்றும் 15
அடி ஆழத்தில் இதற்காக பூமியில் குழி தோண்டப்பட்டுள்ளது. அந்தக் குழிக்குள் இறங்கிய பிரமோத் பாபா, உள்ளே ஒரு கட்டிலின்மீது அமர்ந்த நிலையில் தியானத்தில் ஆழ்ந்துள்ளார். பின்னர் கட்டிலின் மேற்பகுதியை ஒரு துணியால் போர்த்திய அவரது பக்தர்கள், மண்ணைத்தள்ளி குழியை மூடி சமன்படுத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சென்ற மாவட்ட நிர்வாக அதிகாரிகளும், பொலிசாரும் அவரை குழியில் இருந்து வெளியே எடுக்க முயன்றபோது அவரது பக்தர்கள் அவர்களை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14 நாட்கள் கழித்து நேற்று பிரமோத் பாபா சமாதிநிலை நீங்கி, குழியில் இருந்து உயிருடன்வந்துள்ளார். 

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாபா நல்ல நிலையில் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனினும், அவர் குழிக்குள் இறங்கியதை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் யாரும் நேரில் பார்க்கவில்லை என்ற தகவலும் தெரியவந்துள்ளது.

No comments

Thank you for your comments