பிரசெல்ஸ் குண்டுவெடிப்பு: காணாமல் போன தமிழர் மரணம்!
பிரசெல்ஸ் குண்டுவெடிப்பின் போது காணாமல் போன தமிழர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் கடந்த 22ம் தேதி ஐ.எஸ் தீவிரவாதிகள் நிழ்த்திய 3 தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 31 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு தமிழகத்தை சேர்ந்த ராகவேந்திர கணேசன் என்பவர் காணாமல் போய்விட்டதால், அவரை கண்டுபிடிக்ககோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
கணேசனை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவர் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments
Thank you for your comments