Breaking News

வேலூரில் : பிரபல ஓட்டல்களில் நாட்பட்ட இறைச்சிகளை விற்பனை செய்யும் அவலம்!

வேலூர், மார்ச் 4-
வேலூரில் உள்ள பிரபல ஓட்டல்களில் நாட்பட்ட இறைச்சிகளை ஃபிரிட்ஜூகளில் வைத்து விற்பனை செய்யும் அவலம் தொடர்ந்து நிலவுகிறது. இதை உணவு கட்டுப்பாட்டு துறை அலுவலர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
வேலூர் மாநகரில் பல பிரபல ஓட்டல்கள் உள்ளன. இந்த ஓட்டல்களில் அசைவ உணவுகள்  அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. இதை வெளியூர்களில் இருந்து வரும் அசைவ உணவு பிரியர்கள் முதல் உள்ளூர்வாசிகளும் உண்டு சுவைக்கின்றனர். இந்த உணவு வகைகள் அனைத்தும் நாட்பட்டவைகளாக இருப்பது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் அந்த உணவு வகைகளை ஃபிரிட்ஜூகளில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஓட்டல் நிர்வாகம் பரிமாறி வருகிறது. இதுபோன்ற உணவு வகைகளை சாப்பிடுவோர் ஃபுட்பாய்சன் என்ற வயிறு உபாதைக்கும், செரிமான கோளாறுக்கும் ஆட்பட வழிவகை செய்கின்றன. இதனால் ஏற்படும் மருத்துவ செலவு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை ஆகிறது. ஆனால் அசைவ உணவுகளின் விலையோ சைவ உணவு வகையை விட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இதனால் ஓட்டல் உரிமையாளர்களுக்கு கொழுத்த லாபம் கிடைக்கிறது.
 இப்படிப்பட்ட அசைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு கொக்கி புழு, நாடா புழு போன்ற பூச்சிகள் வயிற்று பகுதியில் உருவாகின்றது. இதனால் அசைவ உணவு சாப்பிடுவோர் சற்று கவனமாக சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவு கட்டுபாட்டு அலுவலர்கள் நமக்கென்ன என்று மௌனமாக இருக்கிறார்கள். இந்த ஓட்டல்களை ஆய்வு செய்து நாட்பட்ட அசைவ உணவுகளை சேமித்து வைக்கும் ஃபிரிட்ஜூகளை பார்த்தாலே உண்மைநிலை தெரியவரும்.  
நாட்பட்ட உணவுகளில் புழுக்கள் உருவாகின்றது. இதுபோன்ற சம்பவங்களும் ஆங்காங்கே செய்திகளாக வெளிவந்தவண்ணம் உள்ளது. இருப்பினும் இதுபோன்ற செயல்களின் மீது உணவு கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். ஓட்டல் உரிமையாளர்களோ உணவு கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு முறைப்படி கவனித்து ஓட்டலில் நடக்கும் தில்லாலங்கடி வேலைகள் வெளியில் தெரியாத வகையில் சரிகட்டி விடுகின்றனர். இதனால் வழக்கம்போல நாட்பட்ட இறைச்சி வகை உணவுகள் தங்குதடையின்றி விற்பனை வேலு£ரில் படுஜோராக செய்யப்படுகிறது. 
பெரிய ஓட்டல்களில் குறைவான வெளிச்சத்தில் சாப்பிடுவதால் உணவில் உள்ள புழுக்களை வாடிக்கையாளர்கள் அடையாளம் காணமுடியாமல் போகின்றது. 
இதுதொடர்பான முழு செய்தி தொகுப்பு, எந்தெந்த ஓட்டல்கள் மற்றும் அதற்குண்டான படத்துடன், காலச்சக்கரம் விசாரணை குழுவின் மூலம் விரைவில் வெளிவர உள்ளது. பொதுமக்களும் தங்களுக்கு தெரிந்த விவரங்களை எங்களுக்கு தெரியப்படுத்தலாம். வாசகர்கள் பெயர் மற்றும் தகவல்கள் இரகசியம் காக்கப்படும்.

No comments

Thank you for your comments