Breaking News

2016-சட்டசபை தேர்தலுக்கான தேதியை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

தமிழகம், மார்ச் 4-
தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்கம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை இன்று டெல்லியில்  தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி அறிவித்துள்ளார். 

தமிழகம் (234 தொகுதிகள்), புதுச்சேரி (30 தொகுதிகள்), கேரளா (140 தொகுதிகள்), அசாம் (126 தொகுதிகள்), மேற்குவங்கம் (294 தொகுதிகள்) ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாக தேர்தல்  ஆணையம் அறிவித்துள்ளது. மே 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

மேலும், புதுவையில் வரும் ஜூன் 2ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலாகின்றன. தமிழகத்தில் நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22ம் தேதி தான் முடிவடைகிறது.

தமிழகத்தில் 5.8 கோடி வாக்காளர்களும், புதுச்சேரியில் 9 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.

'நோட்டா'வுக்கு தனி சின்னம் வழங்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும். 

மேலும், பணப்பட்டுவாடாவை தடுக்க ஜிபிஎஸ் உடன் நடமாடும், பறக்கும் படைகள் அமைக்கப்படும்.

No comments

Thank you for your comments