மூட நம்பிக்கையால் குழந்தையை உரக்குழியில் புதைத்து வைத்த தம்பதியினர்
கர்நாடகா, மார்ச் 12-
கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம் பசவகல்யாண் தாலுகா ஹூல்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பசவராஜ். இவர் தனது மனைவி மற்றும் பிறந்து 9 மாதங்கள்
மட்டுமே ஆன ஆண்
குழந்தையுடன் வசித்து வருகிறார். பசவராஜின் குழந்தை கால்கள் ஊனமுற்ற
மாற்றுத்திறனாளி ஆகும். குழந்தையின் மாற்றுத்திறனை சரிசெய்ய பல்வேறு மருத்துவர்களை பசவராஜ் சந்தித்துள்ளார். இருப்பினும், அவருடைய முயற்சி தோல்வியில் முடிவடைந்து உள்ளது. இந்த நிலையில், சூரிய கிரகணத்தன்று கிரகணம் முடியும் வரை குழந்தையின் கால்களை உரக்குழியில் புதைத்து வைத்தால் குழந்தையின் கால்கள் சரியாகி விடும் என பசவராஜிடம் அவருக்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.
இதையடுத்து முன்தினம் காலையில் பசவராஜ் தனது வீட்டின் பின்புறம் இருந்த உரக்குழியில் தனது குழந்தையின் கால்களை புதைத்து வைத்தார்.
உரக்குழியில் கால்கள் புதைந்ததால் பயத்தில் குழந்தை அழுதது. இருப்பினும், 2½ மணிநேரத்திற்கு பின்பு தான் பசவராஜ் தனது குழந்தையை உரக்குழியில் இருந்து மீட்டு அவனது கால்களை பார்த்தார்.
ஆனால், அவனது கால்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதைபார்த்த பசவராஜியும், அவரது மனைவியும் மனம் உடைந்து போனார்கள். இதுகுறித்து, பசவராஜ் கூறுகையில், ‘நான் செய்த மூடநம்பிக்கை செயலை எனது நண்பர்கள், உறவினர்கள் கண்டித்தனர்.
இனி ஒருபோதும் நான் மூடநம்பிக்கையில் எனது குழந்தைக்கு துன்பத்தை இழைக்க
மாட்டேன் என வேதனையுடன் தெரிவித்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியது.
No comments
Thank you for your comments