Breaking News

ஆட்டம், பாட்டத்துடன் விருப்ப மனு அளித்த திருநங்கை

சென்னை, மார்ச் 18-
தமிழகத்தில் அதிமுக-வில் சீட் கேட்டு திருநங்கை சுதா விருப்ப மனு அளித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதங்களே உள்ள நிலையில் கூட்டணி கட்சிகள், தேர்தல் அறிக்கை என களமே சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிட ஜனவரி 20ம் தேதி முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை மனு வாங்கப்பட்டது, பிறகு மேலும் மூன்று நாட்கள் நீட்டிக்கப்பட்டது. 

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் போட்டியிட மொத்தம் 26 ஆயிரத்து
174 பேர் விண்ணப்பித்திருந்தனர். தற்போது, அதிமுக- வில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் திருநங்கை சுதா நேற்று மனு அளிப்பதற்காக சுமார் 50 திருநங்கைகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார்.

மேள-தாளம் முழங்க ஆட்டம், பாட்டத்துடன் திருநங்கைகள் வந்ததால், அதிமுக அலுவலகம் உள்ள அவ்வை சண்முகம் சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் திருநங்கைகளும் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியவர் முதலமைச்சர் ஜெயலலிதா. 

திருநங்கைகளுக்கு முகவரி கொடுத்தவர் அவர். எனவே, சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட திருநங்கை ஒருவருக்கும் வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் நான் விருப்ப மனு கொடுத்துள்ளேன்.

விருப்ப மனு அளிப்பதற்கான திகதி முடிந்துவிட்டாலும், எங்களது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

No comments

Thank you for your comments