Breaking News

குதிரைக்கு செயற்கை கால் பொருத்தம்- பாஜக எம்எல்ஏ கைது

உத்தரகாண்ட், மார்ச் 18-
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்த போராட்டத்தின் போது தாக்கப்பட்ட குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநில அரசை கண்டித்து பாஜக சார்பில் டேராடூனில் கடந்த 14ம் திகதி போராட்டம் நடந்தது.

இதில் பொலிஸ் குதிரைப்படையை சேர்ந்த சக்திமான் என்ற குதிரையின்
முன்னங்காலை பாஜக எம்எல்ஏ கணேஷ் ஜோஷி தடியால் அடித்து காயப்படுத்தினார்.

இந்த வீடியோ வைரலாக பரவவே, எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது போலிசார் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில் குதிரையை தாக்கிய எம்எல்ஏ-வை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் குதிரையை கீழே தள்ளிய பிரமோத் போராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

இதற்கிடையே தாக்கப்பட்ட குதிரைக்கு அறுவை சிகிச்சை மூலம், உடைந்து போன கால் நீக்கப்பட்டு செயற்கை கால் பொருத்தப்பட்டுள்ளது என்றும், குதிரையால் தற்போது நிற்க முடிகிறது எனவும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments

Thank you for your comments