சங்கர் ஆணவ கொலை: கோவை சிறையில் இன்று கவுசல்யா முன்னிலையில் குற்றவாளிகள் அணிவகுப்பு
வேறு ஜாதி பெண்ணை காதல் மணம் செய்ததற்காக ஆணவ கொலை செய்யப்பட்ட தலித்
வாலிபர் சங்கரின் மனைவி கவுசல்யா, கொலையாளிகளை இன்று அடையாளம்
காண்பிக்கிறார். இதற்காக கோவை மத்திய சிறையில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளன.
உடுமலைபேட்டை பஜாரில் வைத்து கடந்த 13ம் தேதி தலித் வாலிபர் சங்கர்
அவரது
காதல் மனைவி கவுசல்யா முன்னிலையில் கூலிப்படையினரால் வெட்டி கொலை
செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை சிறையில்
அடைக்கப்பட்டுள்ள கொலையாளிகளை இன்று கவுசல்யா அடையாளம் காட்டுகிறார்.
நீதிபதி ஸ்ரீவித்யா முன்னிலையில், கொலையாளிகள் 5 பேரின் அணிவகுப்பு
நடைபெறுகிறது. அப்போது, கொலையாளிகளின் முகத்தை பார்த்து, கொன்றவர்களை
கவுசல்யா அடையாளம் காட்ட உள்ளார்.
இதற்காக கோவை மத்திய சிறைக்கு இன்று காலை கவுசல்யா அழைத்து
வரப்பட்டுள்ளார். இந்த கொலையை நேரில் கண்ட முக்கியமான சாட்சியம்
கவுசல்யாதான் என்பதால் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments