கண்பார்வையற்ற நபர்களுக்கு வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரெயில் கையேடு கலெக்டர் வழங்கினார்
திருவண்ணாமலை, மார்ச் 22-
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கண்பார்வையற்ற நபர்களுக்கு வாக்காளர்கள் விழிப்புணர்வு பிரெயில் கையேட்டினை கலெக்டர் அ.ஞானசேகரன் வழங்கினார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் மே 16ந தேதி நடைபெறுவதை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளர்களாக
பதிவு செய்வது மற்றும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்த வாக்காளர்களுக்கான விழிப்பணர்வு பிரெயில் கையெட்டினை கண்பார்வையற்ற நபர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ஞானசேகரன் நேற்று வழங்கினார்.
தி.மலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 48,359 மாற்றுத்திறானளிகளில், 18 வயது நிறைவடைந்த 35,762 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மேலும், கண்பார்வையற்ற 3499 மாற்றுத்திறனாளிகளில், 18 வயது நிறைவடைந்த 2979 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். தமிழ்நாடு சட்;டமன்ற பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் கண்பார்வையற்றவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்வது மற்றும் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து மாற்றுத்திறனாளிகள், கல்லூரி, பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலமாக தயாரிக்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கான பிரெயில் கையேட்டினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கண்பார்வையற்ற திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு கலெக்டர் வழங்கினார். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான மே 16 அன்று 100 சதவீதம் வாக்களித்து வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த கையேடு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தல்களில் குறைந்த அளவு வாக்குபதிவான வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் மூலம் இருசக்கர வாகன பிரச்சாரத்தை கலெக்டர் அ.ஞானசேகரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) நா.குணசேகரன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் உமாமகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் எம்.எஸ்.தண்டாயுதபாணி, வட்டாட்சியர்கள் கோபு, பன்னீர்செல்வம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வன், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments