திருப்பூர்: காதல் திருமணம் செய்த தலித் இளைஞர் நடுரோட்டில் வெட்டிக் கொலை, மனைவி படுகாயம்
உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த
பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் ஒரு கும்பல் துடிக்க துடிக்க
வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலித் இளைஞர்
பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான
நிலையில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி
காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் மாமாவும்
அவரது நண்பர்களும் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர்
சங்கர், 22. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில்
படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 19 என்ற இளம்
பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இவர்களின்
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு
முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவுசல்யா, வேறு
சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் உறவினர் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர். கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கருடன் சென்று
விடவே, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில்
புகார் அளித்தனர்.
ஆனால் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக
காவல்நிலையத்தில் கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும்
சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி
வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக
உடுமலைக்கு வந்தனர்.
No comments
Thank you for your comments