Breaking News

சச்சினை நினைவுபடுத்துகிறார் விராட் கோஹ்லி: ஸ்டீவ் வாக் புகழாரம்

ஆஸ்திரேலியா, மார்ச் 18-
தற்போதைக்கு டி20 போட்டிகளின் சிறந்த வீரர் விராட் கோஹ்லி தான் என்று ஆஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் துணை அணித்தலைவரான விராட் கோஹ்லி மூன்று வகை கிரிக்கெட் போட்டியிலும் நிலையான ஆட்டத்தை
வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் டி20 உலகக்கிண்ணத்தில் கோஹ்லி முக்கிய பங்கு வகிப்பார் என்று அவுஸ்திரேலிய முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், கோஹ்லி அவுஸ்திரேலிய வீரரை போல் இருக்கிறார். அவர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாட விரும்புவார். 

அவர் ஒரு அற்புதமான வீரர். ஆனால் அவர் தனது ஆக்ரோஷத்தை கட்டுப்படுத்த வேண்டும். இந்திய அணி நியூசிலாந்திடம் தோற்றதை நினைக்காமல் அடுத்த போட்டியில் கவனம் செலுத்த வேண்டும்.

அவரது சராசரி அபாரமாக இருக்கிறது. அவரது துடுப்பெடுத்தாடும் போது சச்சின் டெண்டுல்கரின் சாயலை பார்க்கிறேன். இந்திய அணி உலகக்கிண்ணம் வென்றால் அதற்கு கோஹ்லியே முக்கிய பங்கு வகிப்பார் என்று கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments