ஓட்டுக்காக துட்டு வாங்கும் வாக்காளர்களின் பொட்டில் அறைவது போல ஒரு மெசேஜ்!
சென்னை, மார்ச் 15-
ஓட்டுப் போட காசு வாங்காதீங்க. மனசாட்சிப்படி வாக்களியுங்கள்.
யாருக்கும் வாக்களிக்க விரும்பாவிட்டால் நோட்டாவுக்கு ஓட்டுப் போடுங்கள்
என்று தேர்தல் ஆணையம் முதற்கொண்டு பல தரப்பினரும் பிரசாரம் செய்து
வந்தாலும் கூட இன்னும் பலரின் மனதில் இந்த வாட்டி என்னா தருவாங்க என்ற
கேள்விதான் தொக்கிக் கொண்டு நிற்கிறது.
மக்களை அந்த அளவுக்கு மூளைச் சலவை செய்து விட்டன அரசியல் கட்சிகள்.
இந்த நிலையில் வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியைப் பார்க்க நேரிட்டது. கிளிப்
பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது போல அவ்வளவு அழகாக எடுத்துக் கூறியுள்ளனர்
ஓட்டுக்காக காசு வாங்குவதன் அவலத்தை..
இதுதான் அந்த செய்தி...
ஒரு மாதத்திற்கு 30 நாள். ஒரு வருடத்திற்கு 365 நாள். 5 வருடத்திற்கு 1825
நாள். ஒரு ஓட்டு 500 ரூபாய். அப்படியானால், 1825ஐ 500ஆல் வகுத்தால் வருவது
ஒரு நாளைக்கு 0.2740 பைசா.
இந்த 27 பைசாவிற்காக நீ விலை போகாதே!
யோசிக்க வேண்டிய விஷயம்தான்!
No comments
Thank you for your comments