Breaking News

தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை? ஸ்டாலின் பதில் என்ன?

சென்னை, மார்ச் 20-

திமுகவுடன், தேமுதிக கூட்டணி அமைப்பது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்தை நடைபெற்று வருகிறது என்பது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில், அதனை மறுத்துள்ளார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

தேமுதிகவை, திமுகவுடன் இணைப்பதற்கு பேராயர் எஸ்றா சற்குணம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் முயற்சி செய்துவருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஸ்டாலின் கருணாநிதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார், இந்த சந்திப்புக்கு பிறகு வெளியே வந்த அவரிடம் செய்தியாளர்கள், தி.மு.க–தே.மு.தி.க. கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினர்.

தே.மு.தி.க.வுடன் தி.மு.க. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறதா?

நாங்கள் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை.

தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியிருக்கிறாரே?

அது அவருடைய சொந்த கருத்து.

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பின்னர் நடத்தப்படும். தி.மு.க. கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர உள்ளன என்று கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments