குஷ்பு நடிக்கும் விளம்பர படத்திற்கு எதிராக புகார்!
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு நடிக்கும் விளம்பர படத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மாநாடு கட்சி தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ள புகாரில், "அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி நிறுவனங்களை சொந்தமாக நடத்துகின்றன.
தங்களுடைய கட்சி சார்ந்த செய்திகளை மட்டும் ஒளிபரப்பு செய்கின்ற தொலைக்காட்சிகளின் செயலை, தேர்தல் முடியும் வரை தடுத்து நிறுத்த வேண்டும்.
அதேபோல் அரசியல் கட்சிகள் தங்களின் சின்னங்களை நிரந்தர 'லோகோ'வாக தொலைக்காட்சிப் பெட்டிகளில் வைத்துள்ளது. அதையும் தேர்தல் முடியும் வரையில் தடுத்து நிறுத்த வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக பொறுப்பில் இருக்கும் நடிகை குஷ்பு, சில தனியார் நிறுவன விளம்பரங்களில் நடித்துள்ளார்.
அது பிரதானமான பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது, இது அப்பட்டமான தேர்தல் விதி மீறல் குற்றமாகும்.
இதற்காக நடிகை குஷ்பு மீதும், விளம்பரத்தை வைத்துள்ள அந்த தனியார் நிறுவனம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Thank you for your comments