Breaking News

திருவண்ணாமலை, மார். 5-
அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தொடர்ந்து முதல்வராக வேண்டி திருவண்ணாமலை அருள்மிகு ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் 108 சுமங்கலி பூஜை நேற்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 68வது
பிறந்த நாள் விழாவையட்டி தி.மலை தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் தி.மலை அருள்மிகு காமாட்சியம்மன் கோவிலில் முதல்வர் ஜெயலலிதா நீடூழி வாழ வேண்டியும், அவர் தொடர்ந்து முதல்வராக வேண்டியும் தி.மலை தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சத்ய வி.சிவக்குமார் தலைமையில் 108 பெண்கள் பங்கேற்ற சுமங்கலி பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மலை தெற்கு மாவட்ட கழக செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன் கலந்து கொண்டு சுமங்கலி பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு சுமங்கலி பூஜைக்கான பொருட்களையும் பொதுமக்களுக்கு இனிப்பும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் வி.கனகராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் பீரங்கி ஜெ.வெங்கடேசன், ஒன்றிய கழக செயலாளர் எல்.புருஷோத்தமன், நகர கழக அவைத் தலைவர் பழனி, பொருளாளர் ராமமூர்த்தி, நகரமன்ற உறுப்பினர் ஜெ.எஸ்.செல்வம், மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மலை தெற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சத்ய வி.சிவக்குமார் செய்திருந்தார்.

No comments

Thank you for your comments