ஏமனில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 இந்திய செவிலியர்கள் பலி
ஏமன், மார்ச் 5-
ஏமன் நாட்டில் உள்ள ஏடெனில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா தொடங்கி வைத்த ஒரு முதியோர் இல்லத்தை தீவிரவாதிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலரை சுட்டுக் கொன்று
அந்த இல்லத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அங்கிருந்தவர்கள் மீது
கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகளின் இந்த தாக்குதலில் அந்த முதியோர் இல்லத்தில் இருந்த 4
இந்திய செவிலியர்கள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள்
வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை.
இருப்பினும், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments
Thank you for your comments