தேர்தல் நடைமுறைக்கு வருவதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து மாவட்ட கலெக்டர் அ.ஞானசேகரன் தகவல்
திருவண்ணாமலை, மார். 5-
தேர்தல் நடைமுறைக்கு வருவதால் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக கலெக்டர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2016க்கான தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருவதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் திங்கள்தோறும் நடைபெறும்வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் மார்ச் 7ந் தேதி முதல் நடைபெறாது.
அடுத்த மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் தேதி பின்னர்
அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments