தமிழக சட்டசபை தேர்தல் தேதி இன்று வெளியாக வாய்ப்பு! பரபரப்பில் அரசியல் கட்சிகள்
சென்னை, மார்ச் 4-
தமிழக அரசின் பதவி காலம் மே மாதம் 22ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே,
அதற்கு முன்னதாக தேர்தலை நடத்தியாக வேண்டியது கட்டாயம். இதற்கான பணிகளில்
தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழ்நாட்டைப்போல், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய
மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, தேர்தல் தேதி
தொடர்பாக, இந்த 5 மாநில தேர்தல் அதிகாரிகளிடம் இந்திய தேர்தல் ஆணையர்
கருத்து கேட்டுவந்தார். டெல்லியில் 5 மாநில தேர்தல் அதிகாரிகள் பங்கேற்ற
கூட்டமும் நடந்தது.
தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது.
அதேநேரம், பாதுகாப்பு அச்சுறுத்தல் நிறைந்த வடமாநிலங்களில், பல்வேறு
கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
ராஜேஷ் லக்கானி நேற்று முன்தினம் கூறியிருந்தார். எனவே இன்று மாலை தமிழக
சட்டமன்ற தேர்தல் தேதி உள்பட 5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில், இந்திய தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி இன்று மாலை
பத்திரிகையாளர்கள் மத்தியில் இதை அறிவிக்க வாய்ப்புள்ளது. தேர்தல் தேதி
அறிவிக்கப்பட்டவுடன், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை
விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிடும்.
No comments
Thank you for your comments