சூரிய கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 9ம் தேதி தரிசனம் ரத்து
திருப்பதி , மார்ச் 4-
கிரகண காலத்திற்கு, 6 மணி நேரத்திற்கு முன், கோவில் நடை சாத்தப்படும்
என்பதால், மார்ச், 8 இரவு, 8:30 மணிக்கு, ஏழுமலையான் கோவில் நடை சாத்தப்பட
உள்ளது.
சூரிய கிரகணம் முடிவுற்ற பின், கோவில் முழுவதும் சுத்தம் செய்து,
புண்ணியாவசனம் நடத்திய பின், கோவில் நடை திறக்கப்படும். அதன் பின்,
பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதையொட்டி, மார்ச்,
9 காலை நடைபெற இருந்த, ஸஹஸ்ர கலசாபிசேகம் ரத்து செய்யபட்டுள்ளது.
தோமாலை, அர்ச்சனை, சுப்ரபாதம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள், அன்றைய தினம்,
ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்படும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments