இறுதிப்போட்டியில் இந்தியா: யுவராஜ்சிங்குக்கு டோனி பாராட்டு
மிர்பூர், மார்ச். 2:
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதலில் விளையாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. கபுகேந்திரா 30 ரன்னும் ஸ்ரீவர்த்தனா 22 ரன்னும், பெரரா 6 பந்தில் 17 ரன்னும் எடுத்தனர். அஸ்வின், பும்ரா, ஹர்த்திக் பாண்டயா தலா 2 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இந்திய அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது. வீராட்கோலி 47 பந்தில் 56 ரன்னும் (7பவுண்டரி), யுவராஜ்சிங் 18 பந்தில் 35 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
இந்திய அணி தொடர்ந்து பெற்ற 3–வது வெற்றியாகும். ஏற்கனவே வங்காளதேசம், பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. ஹாட்ரிக் வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி நிருபர்களிடம் கூறியதாவது:–
நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன். கடைசியாக 9 முதல் 10 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். இதில் நாங்கள் சிறப்பாக ஆடினோம்.
யுவராஜ்சிங்கின் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. நான் ஏற்கனவே கூறியது போல் ஆடுகளத்தில் நிலைத்து நின்றால் அவர் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி விடுவார். அவரது அணுகுமுறை சிறப்பாக இருந்தது. சரியான நேரத்தில் அவர் ஷாட்களை வெளிப்படுத்தினார். அவர் சிக்சர்களை விளாசினார். அவரது விருப்பத்துக்கு ஏற்றவாறு சிக்சர்கள் அடிக்க கூடிய திறமை இன்னும் இருக்கிறது.
அவர் களம் இறங்கும் போதே நெருக்கடி ஏற்பட்டு விடுகிறது. அவர் மிடில் ஓவரில் சரியான நேரத்தில் திறமைையை வெளிப்படுத்தினார். வீராட் கோலியையும் இந்த நேரத்தில் பாராட்டாமல் இருக்க முடியாது. அவரது ஆட்டம் எப்போதுமே அணிக்கு முக்கிய பங்காக இருக்கிறது. 2014 ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையிடம் தோற்றோம். அதற்கு பழிவாங்கும் வகையில் பெற்ற வெற்றி என்று கூறுவதை விரும்பவில்லை. இது ஒரு சிறந்த வெற்றி. இவ்வாறு டோனி கூறியுள்ளார்.
இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஐக்கிய எமிரேட்சை நாளை எதிர் கொள்கிறது. ஐக்கிய அரசு எமிரேட்சை வீழ்த்தி 4–வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இந்தியா உள்ளது.

No comments
Thank you for your comments