Breaking News

உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்த 5 இந்திய பெண்கள் வெளியிட்ட போர்ப்ஸ் பத்திரிக்கை

http://tamil.oneindia.com/img/2016/03/03-1456984601-forbes32-600.jpgடெல்லி, மார்ச் 3-
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 5 பெண்கள் இடம் பிடித்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிக்கை உலக பெரும் பணக்காரர்கள்(பில்லியனர்கள்) பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் 2016ம் ஆண்டுக்கான உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 5 பெண்கள் இடம்பிடித்துள்ளனர்.

பணக்காரர்கள்
போர்ப்ஸ் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 1, 810 பேர் இடம் பிடித்துள்ளனர். அதில் 190 பேர் பெண்கள். கடந்த 2015ம் ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 197 பெண்கள் இடம் பிடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சாவித்ரி ஜிந்தால்
ஜிந்தால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிந்தால் போர்ப்ஸ் பட்டியலில் 453வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.23 ஆயிரம் கோடி. கடந்த 5 ஆண்டுகளில் சாவித்ரியின் சொத்து மதிப்பு வெகுவாக குறைந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

இந்து ஜெயின்
பென்னட் கோல்மேன் அன்ட் கம்பெனியின் தலைவர் இந்து ஜெயின் போர்ப்ஸ் பட்டியலில் 549வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.21 ஆயிரம் கோடி.

கோத்ரேஜ்
கோத்ரேஜ் குழுமத்தை சேர்ந்த ஸ்மிதா கிருஷ்ணா கோத்ரேஜ் போர்ப்ஸ் பட்டியலில் 810வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி. அவர் தற்போது தான் முதல் முறையாக உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

லீனா திவாரி
சக்கரை நோய், இதய நோய் உள்ளிட்டவைக்கு மருந்து தயாரிக்கும் யுஎஸ்வி நிறுவன தலைவர் லீனா திவாரி போர்ப்ஸ் பட்டியலில் 1067வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி. லீனா முதன்முதலாக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

ஹேவல்ஸ்

ஹேவல்ஸ் இந்தியா குழும தலைவர் வினோத் குப்தா ரூ.7 ஆயிரம் கோடி சொத்துக்களுடன் போர்ப்ஸ் பட்டியலில் 1,577வது இடத்தில் உள்ளார்.

No comments

Thank you for your comments