Breaking News

இந்தியா–பாகிஸ்தான் மோதும் ஆட்டம் தர்மசாலாவில் திட்டமிட்டபடி நடைபெறும்: கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம்

இந்தியா–பாகிஸ்தான் மோதும் ஆட்டம் தர்மசாலாவில் திட்டமிட்டபடி நடைபெறும்: கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் இந்தியா, மார்ச் 2:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சசாங்க் மனோகர் கூறியதாவது:

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா–பாகிஸ்தான் மோதும் ஆட்டம் 19ம் தேதி தர்மசாலாவில் திட்டமிட்டபடி நடைபெறும். போட்டிக்கான இடத்தை மாற்ற இயலாது . கடைசி நேரத்தில் மாற்றினால் கிரிக்கெட் வாரியத்தின்
நற்பெயர் பாதிக்கப்படும். அந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதே எங்களது தலையாய பணியாகும். துரதிருஷ்ட வசமாக இதில் அரசியல் விளையாடுகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஆலோசித்த பிறகே இடம் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments