Breaking News

திருவண்ணாமலை அருகே நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் பள்ளியை முற்கையிட்டு பெற்றோர்கள் போராட்டம்

திருவண்ணாமலை, மார்ச் 11-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மாவட்ட எல்லையில் உள்ள கொட்டையூர் கிராமத்தில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் பாலியல்சிலுமிஷங்கள் செய்வதால் பணிஇடைநீக்கம் செய்ய கூறி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டராம்பட்டு ஒன்றியம் கொட்டையூரில் நடுநிப்பள்ளியில் தமிழாசிரியராக
பணிபுரிபவர் எடக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் பழனிச்சாமி(45).இவர்  ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடங்களை நடத்துவார். சில நேரங்களில் ஆறு மற்றும் ஏழாம் வகுப்புக்கும் பாடம் நடத்துவார். இந்நிலையில் அவர் சில மாணவிகளிடம் அத்துமீறி சில்மிஷங்கள் செய்து
வந்துள்ளார். நேற்று முன் தினம் சில மாணவிகள் ஆசிரியரின் நடத்தை குறித்து தங்களின் பெற்றோர்களிடம் கூறி அழுத்துள்ளனர்.

உடன் பெற்றோர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் நேற்று  காலை முதல் பள்ளியை முற்றுகையிட்டு  ஆசிரியர் பழனிச்சாமியை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவேசமாக கூறினார்கள். உடனடியாக பள்ளிக்கு காவல் துறையினரும், மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜான்வின்சென்ட், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ராஜகோபால் மற்றும் குணசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் ஆசிரியர் பழனிச்சாமியை பாதிக்கப்பட்டவர்கள் சார்பல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் பழனிச்சாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதே ஆசிரியர் பழனிச்சாமி அகரம்பள்ளிப்பட்டில் இருந்த இதே குற்றச்சாட்டின் அடிப்பையில் பணிமாற்றம் செய்யப்பட்டு கொட்டையூர் பள்ளிக்கு மாற்றம் செய்ப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

பள்ளியில் 4 ஆசிரியைகளும், 5 ஆசிரிர்களும் பணிபுரிகின்றனர்.

No comments

Thank you for your comments