Breaking News

இனி உங்கள் முன் கலக்கப்போகும் குட்டி விமான அறிவிப்பாளர்

உலகம், மார்ச் 16-
உலகம் முழுவதும் லுஃப்தான்ஸா ஏர்லைன்ஸால் நடத்தப்பட்ட "Your Announcement Contest"ல், இந்தியாவை சேர்ந்த யாஷஸ் முதலிடம் பெற்றுள்ளான். லுஃப்தான்ஸாவைச் சேர்ந்த சிறந்த ஜூரி நபர்கள் இணைந்து, 15 பேர் கொண்ட பட்டியலை உருவாக்கி, அதிலிருந்து ஓன்லைன் ஓட்டுப்பதிவின்மூலம்
வெற்றியாளரை தெரிவு செய்துள்ளனர். இதில் 9 நாடுகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 14 குழந்தைகளில் இந்தியாவை சேர்ந்த யாஷஸ் தஸ்ஸானி முதலிடம் பெற்றுள்ளான்.

விமானத்தினுள் நேரடி அறிவிப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது, கேபின் குழுவினருடன் இணைந்து, ஃப்ராங்ஃபர்ட் செல்லும் விமானத்தில் அனைத்து பயணிகள் முன்னிலையிலும் அறிவிப்பு செய்யும் வாய்ப்பைப் பெற்றுள்ளான். இதுமட்டுமின்றி, ஐரோப்பாவுக்கு இரண்டு பேருடன் செல்வதற்காக இலவச அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. 

யாஷஸ் வெற்றி பெற்றதை அறிவிக்க, லுஃப்தான்ஸாவில் இருந்து ஒரு குழு ஒன்று, அவன் படிக்கும் ஜி.டி.மெமோரியல் பள்ளிக்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தற்போது அது தொடர்பான காட்சிகள் மற்றும் உற்சாகத்தில் யாஷஸ் பேசும் காட்சிகளும் வீடியோவாக வெளியாகியுள்ளன. 

இதுகுறித்து தெற்கு ஆசியாவின் இயக்குனர் வொல்ஃப்காங்க் வில் கூறுகையில் யாஷஸ் தன் கனவை நிறைவேற்றிக் கொண்டதற்கும், அவனுடைய திறமைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

எங்கள் வாடிக்கையாளர்களில் குழந்தைகள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறோம் என்று கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments