Breaking News

30 ஆயிரம் இந்தியர்களை வெளியேற்றும் பிரிட்டன்? அதிர்ச்சித் தகவல்

பிரிட்டன், மார்ச் 16-
பிரிட்டன் அரசு ஆண்டு வருமானம் குறைவாக உள்ளவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.  வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இதனை தடுக்கும் வகையில் பிரிட்டனில் நிரந்தரமாக
குடியேறுவதற்கான விதிகளை அந்நாட்டு அரசு மாற்றி அமைத்துள்ளது.
எனவே டியர்டு 2 விசாவின் கீழ் பிரிட்டன் வரும் வெளிநாட்டவர்களின் ஆண்டு வருமானம் 5 ஆண்டுகளுக்கு பிறகும் ரூ.33 லட்சத்துக்கும் கீழ் இருந்தால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்ற உள்ளனர்.

இந்த விதிமுறை அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர இருப்பதால் சுமார் 30 ஆயிரம் இந்தியர்கள் பிரிட்டனை விட்டு வெளியேற்றப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments