சென்னை: தாம்பரம் அருகே கல்குவாரி சரிந்து விபத்து
சென்னை, மார்ச் 16-
தாம்பரம் கிஷ்கிந்தா தீம் பார்க் அருகே எருமையூர் என்ற பகுதியில்
தனியார் கல்குவாரி உள்ளது. இன்று காலையில் குவாரியில் இருந்த கற்கள்
மளமளவென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
கல்குவாரியில் இருந்து விழுந்த கற்கள் சரிந்து நான்கு வாகனங்கள் மீது
விழுந்ததாக கூறப்படுகிறது. வாகனங்களில் ஆட்கள் இருந்திக்கலாம் என்றும்,
இதனால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகின்றது.
கல்குவாரியில் இருந்து சரிந்து விழுந்த கல் குவியலுக்குள் நான்கு தொழிலாளர்
சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு மீட்புபணி வீரர்கள்
விரைந்துள்ளனர். அவர்கள் கற்குவியலுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க
நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments