Breaking News

நடிகர் சாய் பிரசாந்த் விஷம் அருந்தி தற்கொலை

சென்னை, மார்ச் 14-
Serial actor sai prasanth got suicide சென்னையில் பிரபல சின்னத்திரை நடிகரான சாய்பிரசாந்த் நேற்றிரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தமிழில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த சாய்பிரசாந்த் "நேரம்", "ஐந்தாம் படை" உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவர் ஒரு மிமிக்ரி கலைஞரும் ஆவார்.

இவரது பெற்றோர்கள் பெங்களூரில் உள்ள நிலையில் நேற்று மாலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இவரது நண்பர்கள் மற்றும் போலீசார் கதவை உடைத்து இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கு முன், தன்னுடைய வாழ்வில் தொடர்ந்து வரும் தீராத மனவுலைச்சலே தனது தற்கொலைக்கு காரணமென கடிதம் எழுதிவைத்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தாகிய இவர் நிரஞ்சனா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவரது தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி கோடம்பாக்கத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சமீபகாலமாக சீரியல் நடிகர்கள், இயக்குனர்கள் தற்கொலை செய்துவருவது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Thank you for your comments