பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை இன்று ஒருநாள் நிறுத்தம்
பழனி, மார்ச் 14-
பழனி மலைக்கோயில் "ரோப்கார்" வயதானவர்கள் மற்றும் மலை ஏற இயலாத
பக்தர்களுக்காக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாதாந்திர பராமரிப்பு
பணிக்காக இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தப்பட உள்ளது.
இதில் மாதாந்திர பராமரிப்பு பணியில் உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை
கழற்றி ஆயில், கிரீஸ் இட்ட பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு
எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும்.
அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் "ரோப்கார்"
மீண்டும் நாளை முதல் வழக்கம்போல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
இயக்கப்படும் என பழனி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments
Thank you for your comments