Breaking News

பிரெஞ்ச் ஓபனை வெல்வது கடினமானது: சானியா

ஐதராபாத், மார்ச்.3-

சர்வதேச டென்னிசில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் இணை ‘நம்பர் ஒன்’ ஜோடியாக திகழ்கிறது. இவர்கள் தொடர்ச்சியாக 41 ஆட்டங்களில் வெற்றி பெற்று வியக்க வைத்தனர்.

இந்த நிலையில் தெலுங்கானா மாநில சுற்றுலா வளர்ச்சித்துறை சார்பில் ஐதராபாத்தில் நேற்று நடந்த சொகுசு படகுசவாரி திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற சானியா மிர்சா நிருபர்களிடம் கூறுகையில், ‘கடைசியாக
ஆடிய மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் நானும், ங்கிசும் இணைந்து பட்டத்தை வென்றுள்ளோம். எனவே அடுத்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசிலும் (மே22 முதல் ஜூன் 5-ந்தேதி வரை) நாங்கள் மகுடம் சூடுவதற்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். 

ஆனால் பிரெஞ்ச் ஓபனை வெல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இது எனக்கு உகந்த ஆடுகளம் (களிமண்தரை) கிடையாது. ஆனால் எங்களால் எதையும் சாதிக்க முடியும். இந்த கிராண்ட்ஸ்லாமையும் வென்று ‘சான்டினா ஸ்லாம்’ என்ற நிலையை அடைவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

No comments

Thank you for your comments