Breaking News

பணம் கட்டாததால் 10 நாட்கள் வேலை செய்யாத டி.எஸ்.ஓ செல்போன்கள்- திருவள்ளூரில் பரபரப்பு

Tiruvallur DSO office cellphone out of order for 10 daysசென்னை, மார்ச் 11-
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகளின் தொலைபேசிகள் கிட்டதட்ட 10 நாட்களுக்கும் மேலாக செயலிழந்து இருந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளுர் மாவட்டத்தில், மாவட்ட வழங்கல் அதிகாரியின் கீழ் 12 டி.எஸ்.ஓ அதிகாரிகள் உள்ளனர். மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் டி.எஸ்.ஓ அதிகாரிகளின் செல்போன்கள் கடந்த 10 நாட்களாக வேலை செய்யவில்லை.

காரணமென்னவென்றால் செல்போன் கட்டணம் கட்டவில்லை என்பதுதானாம். இதனால் கலெக்டர் உள்பட தேர்தல் அதிகாரிகள், இந்த அதிகாரிகளிடம் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கட்டணம் செலுத்த வேண்டிய மாவட்ட வழங்கல் அதிகாரி சந்தியா மெத்தமான இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் நேரங்களில் இப்படி அஜாக்கரையாக வேலை செய்யும் இந்த பிரிவு அதிகாரிகள், சாதாரண நாட்களில் எப்படி வேலை செய்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் மீது கலெக்டர் சுந்தரவல்லி நடவடிக்கை எடுப்பாரா என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments

Thank you for your comments