Breaking News

8 பேருக்கு வாழ்வளித்த இந்திய வாலிபர்

பெங்களூர், மார்ச் 9-
அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் எட்டு பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளன.

நுரையீரல் நோய் காரணமாக நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட 24 வயதான ராஜீவ் நாயுடு என்ற பெங்களூரு வாலிபர் கடந்த ஞாயிறு அன்று உயிரிழந்துள்ளார்.


ராஜீவ் நாயுடு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொறியியல் பட்டம் பயின்று வந்தவர்.

அவர் இறப்பை அடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் உறுப்புகள் தானம் மூலம், எட்டு பேர் புது வாழ்வு பெற்றுள்ளனர்.
ராஜீவ் நாயுடுவின் சகோதரி கிருத்திகா புருஷோட்டம், அவரது உடல் உறுப்புகள் தானம் செய்ததன் மூலம் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ராஜீவ் நாயுடுவின் உடலை குடும்பத்தினர் வியாழக்கிழமை பெங்களூரு கொண்டு வரவுள்ளனர்.

மேலும், வெள்ளிக்கிழமை அவரது சொந்த ஊரான வித்யாநகரில் உடல் அடக்கம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments

Thank you for your comments