திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 35 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
திருவண்ணாமலை, மார்ச் 10-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் 35 ஆயிரம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் என தி.மலை மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர் பொன்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 10ஆம் வகுப்பு
செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் பற்றிய அனைத்து தகவல்கள் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த பட்டியலை மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தற்போது மாணவர்களின் அனைத்து தகவல்கள் மற்றும் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கை சரிபார்க்கப்பட்டு வருகிறது.
தி.மலை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச்
சேர்ந்த 35 ஆயிரத்து 281 மாணவ மாணவிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதவுள்ளனர். தி.மலை கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 120 மாணவர்களும், 11 ஆயிரத்து 122 மாணவிகள் என மொத்தம் 2 ஆயிரத்து 242 மாணவ மாணவிகளும் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 494 மாணவர்களும் 6 ஆயிரத்து 545 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 39 மாணவ மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர். மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 281 ஆகும்.
10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக மாவட்டத்தில் 115 தேர்வு மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பொன்.குமார்
தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments