மும்பையில் சோதனை குழாய் மூலம் பிறந்த பெண்ணுக்கு பிரசவம்
மும்பை, மார்ச் 9-
மும்பை மாட்டுங்கா பகுதியைச் சேர்ந்த 29 வயதான
ஹர்ஷா சவுதா ஷா, கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக கடந்த சில தினங்களுக்கு
முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரி அன்று அவர் அழகான ஆண்
குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
ஹர்ஷா சவுதா ஷா, கடந்த 1986–ம் ஆண்டு இதே மருத்துவமனையில் சோதனை குழாய் மூலம் பிறந்த குழந்தை ஆவார்.
சோதனை குழாய் குழந்தையான ஹர்ஷா சவுதா ஷா பிறக்க காரணமாக இருந்த டாக்டர்
இந்திரா ஹிந்துஜா தான் இன்று அவருக்கு பிரசவமும் பார்த்துள்ளார்.
ஹர்ஷா சவுதா ஷா பிறந்த நாளில் இருந்து இதுவரை 15 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட சோதனை குழாய் குழந்தைகளை இந்த உலகத்திற்கு அளித்துள்ளதாக கூறிய
மருத்துவர் இந்திரா, ஹர்ஷா சவுதா ஷா பிறந்ததினம் இன்றும் தம் நினைவில் இருப்பதாகவும், தாம் அவரை நினைத்து பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments