Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 32 மாதிரி வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு

திருவண்ணாமலை, மார்ச் 19-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கு 32 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி 100 சதவீத வாக்குப்பதிவிற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தி.மலை மாவட்டத்தில் 32 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வாக்குப்பதிவின் போது வாக்காளர் அட்டையை சரிபார்த்தல், கையொப்பம் பெறுதல், வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரை உறுதிசெய்தல், மை வைத்தல், வாக்களிப்பது உள்ளிட்ட நடைமுறைகள் குறித்து
பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். குறிப்பாக புதிய வாக்காளர்கள் பதற்றமின்றி வாக்களிக்க இந்த விளக்கம் உதவியாக இருக்கும்.

ஒவ்வொரு மாதிரி வாக்குச்சாவடியிலும் அனுபவமிக்க தேர்தல் பணியாளர்கள்
ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்கான இடங்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களே உறுதி செய்து மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்படும்.
தேர்தலுக்கு முன்பு வரை சுழற்சி அடிப்படையில் மாதிரி வாக்குச்சாவடிகள்
செயல்படவுள்ளன. இவ்வாறு தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தன.

No comments

Thank you for your comments