Breaking News

மதுரை அருகே பயங்கர ஆயுதங்களுடன் 7 இளைஞர்கள் கைது

மதுரை, மார்ச் 16-
மதுரை அருகே பயங்கர ஆயுதங்களுடன் வாகனத்தில் சுற்றித் திரிந்த 7 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள ஆலாத்தூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சுமோ காரை மடக்கி சோதனை செய்ததில் அதில் ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசாரை பார்த்த அந்த கும்பல் இறங்கி தப்பி ஓட முயன்றனர்.

போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில், அவர்கள் பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கும்பலை சேர்ந்த ஆறுமுகம் (வயது28), சரவணன் (27), வினோத்குமார் (23), அருண்குமார் (25), அஜித் குமார் (28), அருண்பிரகாஷ் (24), ராஜேந்திரன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய கார் டிரைவர் சுரேஷ் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதானவர்கள் மதுரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காரும், அதில் இருந்த பயங்கர ஆயுதங்களையும் ஊமச்சிகுளம் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments

Thank you for your comments