ஏலகிரி மலையிலுள்ள தொன்போஸ்கோ கல்லூரியின் 4வது கல்லூரி தின விழா
ஏலகிரி மலையிலுள்ள தொன்போஸ்கோ கல்லூரியின் 4வது கல்லூரி தின விழா 27.02.2016 அன்று கொண்டாடப்பட்டது. இவ் விழாவின் சிறப்பு விருந்தினர்களாகத் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி ரமேஸ் திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரிய ஆண்டனி ராஜ் ச.ச. ஆகியோர் கலந்துக்கொண்டனர் போஸ்கோ கணினி மென்பொருள் நிறுவன இயக்குநர் அருந்தந்ததை ததேயுஸ் ச.ச. கல்லூரி நிருவாகி அருட்தந்தை ஜெரால்டு பிண் டே.ச.ச. அருட்தந்தை சத்தியநாதன் ச.ச. ஆகியோர் முன்னிலை வகுத்தனர். மாலை 4.30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்தோடு பேராசிரி யை ஜெயமேரி கிறிஸ்துராஜ் வரவேற்புரை நல்க கல்லூரி விழா இனிதே துவங்கியது கல்லூரி முதல்வர் அருட்தந்தை வர்கிஸ் அவர்கள் மலைவாழ் மாணவர்கள் மட்டுமல்லாது பிற மாணவர்களும் குறைந்த செலவில் கல்வியறிவு பெற்று இன்கல்லூரி யால் மேம்படும் நிலையை எடுத்துக்கூறி ஆண்டறிக்கையைச் சமர்ப்பித்தார் . பின்னர் அமைச்சர் கே.சி வீரமணி அவர்கள் தமிழக உயர்கல்வியாலனது தேசிய அளவசில் 17வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியிருப்பதைச் சுட்டிக்காபட்டி மாணவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை குறிப்பிட்டதோடு கிறத்துவ கல்வி நிறுவனங்கள் கல்வி மேம்பட்டிட முக்கிய பங்காற்றுவதையும் குறிப்பிட்டார் . அதை தொடர்ந்து கருத்துரை வழங்கிய கே.ஜி. ரமேஸ் அவர்கள் கல்வித்துறையில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்கள் குறித்து உரையாற்றினார் பின்னர் பல்வேறு கலை நிகழ்சிகள் நடைபெற்றன. அதை தொடர்ந்து கல்லூரி தினப் பேருரையாற்றிய தூய நெஞ்சக்கல்லூரி முதல்வர் அருட்தந்தை மாஜீய ஆண்டனி ராஜ் ச.ச அவர்கள் இக்கல்லூரி நிறுவனர் அருட்தந்தை கெசு அவர்களின் சீரிய சமூகத் தொண்டினையும் சலேசிய சபையினாஜீன் இறை சமூகத் தொண்டுகள் பற்றியும் உரையாற்றினார் . பின்னர் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற பின்னர், கல்லூரி துணை முதல்வர் மார் ட்டின் ச.ச. அவர்கள் நன்றியுரை கூற கல்லூரி கீதத்தோடு விழா இனிதே நிறைவுற்றது.
No comments
Thank you for your comments