Breaking News

ஆம்பூர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ; கணவன் மனைவி உள்பட 4 பேர் பலி;


வாணியம்பாடி, மார்ச் 04-
ஆம்பூர் அருகே கார் டயர் வெடித்து எதிரே வந்த லாரி மீது மோதி  கார் விபதுக்குள்ளானத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு  பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஒய்வுபெற்ற மருத்துவர் குமாரசாமி (வயது66) இவர் தன் மனைவி லட்சுமி மற்றும் கமலா(55)    உட்பட 4 பேர் ஒரே காரில் பெங்களூரில் நடைபெற்ற தன்னுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று பின்னர் மீண்டும் சென்னை திரும்பிகொண்டிருந்தனர். கிருஷ்ணா என்பவர் காரை ஒட்டி வந்தார். 
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்துள்ள தோட்டாளம் தேசிய நெடுஞ்சாலையில் காரின் முன்பக்க டயர் வெடித்து அந்த கார் எதிர் சாலைக்கு சென்று எதிரே வந்த லாரி மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் நொறுங்கி சேதமானது. இந்த காரில் பயணம் செய்த குமாரசாமி அவருடைய மனைவி லட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.படுகாயமடைந்து உயிருக்கு போராடிகொண்டிருந்த கிருஷ்ணா மற்றும் கமலா ஆகிய இருவரையும் அப்பகுதிமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் கமலா வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கமலா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆம்பூர் கிராமிய போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஆம்பூர் பகுதியில் விபத்தில்  4 பேர் பலியான சமபவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments

Thank you for your comments