சத்தீஸ்கரில் நக்சல்கள் கண்ணிவெடி தாக்குதல்: தமிழக வீரர் பலி, 4 பேர் படு காயம்
சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் புதைத்து வைத்திருந்த
கண்ணி வெடியில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்.
மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் அதிகம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில்
சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முரளிகூடா
என்ற இடத்தில் மாவோயிஸ்ட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணி வெடி திடீரென
வெடித்து சிதறியது.
இதில் படுகாயம் அடைந்த ரங்கா ராகவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் ஆவார். சியாம் நிவாஸ் என்பவரும்
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதஜலில் முதலுதவி அளிக்கப்பட பின் படுகாயமடைந்த நான்கு பேரும் மேல்
சிகிச்சைக்காக ஹைதராபாத் அனுப்பி வைக்கப்பட்டனர். முரளிகூடா வனப்பகுதியில்
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நக்சலைட்டுகளை தேடுதல் வேட்டை தீவிர
படுத்தப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments