Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் - மாவட்ட கலெக்டர் அ.ஞானசேகலன் தகவல்

திருவண்ணாமலை, மார்ச் 12-
 திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கம் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் பறக்கும் படையினரிடம் புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

தி.மலை மாவட்டத்தில் அமைந்துள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 8 மணி நேர சுழற்சி அடிப்படையில் பணியாற்ற ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படைகளை அமைத்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.


ஒவ்வொரு பறக்கும் படையிலும் தாசில்தார் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஒரு சிறப்பு எஸ்ஐ, 3 போலீசார் மற்றும் ஒரு வீடியோ கிராபர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வசதியாக பறக்கும் படையினரை தொடர்பு கொள்ளும் செல்போன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பறக்கும் படையினர் விவரம் வருமாறு,
திருவண்ணாமலை டி.கிருஷ்ணமூர்த்தி 9444675231, பி.முருகன் 7402606634,
ஏ.உதயகுமார் 9788999286, செங்கம் (தனி) தனஞ்செயன் 9487756855, தீர்த்தமலை
9443638611, சி.ஜெயப்பிரகாஷ் 9498151593, கீழ்பென்னாத்தூர் ஜி.வேடியப்பன்
9498151469, ஜெ.சுகுணா 9442254997, சஜேஷ்பாபு 9498002594, கலசபாக்கம் ஜி.கிருஷ்ணமூர்த்தி 9442671105, ஏ.பெருமாள் 9566899013, கே.சுமதி 9486878749, போளூர் ஆர்.ராஜேஷ்வரி 9789224465, டி.பலராமன் 9600799662, கே.மகேந்திர மணி 9442022016, ஆரணி தேவேநதிரன 9498151528, கே.ஈஸ்வரன் 9597668951, பி.ரமேஷ் 9444586452, செய்யாறு பி.கோபால் 9486845710, பெருமாள் 9498151171, எம்.தமிழ்மணி 8148956356, வந்தவாசி (தனி)எஸ்.பிரபாகரன் 9865653748, ஏ.கிருஷ்ணமூர்த்தி 9486074799, ஏ.ஆனந்தன் 9042007854

No comments

Thank you for your comments