திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை உரிமம் பெற்ற 154 துப்பாக்கிகள் ஒப்படைப்பு
திருவண்ணாமலை, மார்ச் 12-
சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிமம் பெற்றுள்ள 154 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த 4ந் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே பாதுகாப்பு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு உரிமம் பெற்று துப்பாக்கிகளை வைத்திருப்போர் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென கலெக்டர்
அ.ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிமம் பெற்று தனிநபர் வைத்துள்ள 231 துப்பாக்கிகளில் நேற்றுவரை 154 துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை துப்பாக்கிகளை ஒப்படைக்காதவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்டகாவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக துப்பாக்கிகளை ஒப்படைக்காவிட்டால் இந்திய படைக்கலன் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபபடும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
No comments
Thank you for your comments