கணவரிடம் இருந்து காப்பாற்ற 2 மகள்களை கழுத்தை அறுத்துக் கொன்ற எம்.பி.ஏ. பட்டதாரி பெண்
ஹைதராபாத், மார்ச் 17-
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் ரஜினி. எம்.பி.ஏ.
அவரது கணவர் வினய் சுட்கே. அவர்களின் மகள்கள் அஷ்விகா(8),அவிஷ்கா(3).
வினய் பேகம்பட்டில் பரிசுப் பொருட்கள் கடை வைத்துள்ளார்.
ரஜினி புதன்கிழமை மாலை தனது மகள்களின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
இரவு 9.45 மணிக்கு வீட்டிற்கு வந்த வினய் மகள்கள்
பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகள்களை கொன்ற பிறகு ரஜினி டேங்க் பந்த் பகுதிக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
விசாரணையில் அவர் கூறுகையில்,
பிணமாகக் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மகள்களை கொன்ற பிறகு ரஜினி டேங்க் பந்த் பகுதிக்கு சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டிற்கு வந்தார்.
வீட்டில் இருந்த வினயிடம் அவர் நடந்ததை எல்லாம் தெரிவித்தார். மேலும்
தனது தோழிகளுக்கும் மகள்களை கொலை செய்தது குறித்து எஸ்.எம்.எஸ்.
அனுப்பினார் ரஜினி. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார்
ரஜினியை கைது செய்தனர்.
என் மூத்த மகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன்னை ஒருவர் தகாதபடி தொட்டதாக
கூறினார். அதில் இருந்து அவர் தனது தந்தையை பார்த்தாலே பயத்தில்
நடுங்குவார். அதன் மூலம் என் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது என் கணவர்
தான் என எனக்கு தோன்றியது.
இது தொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என்
கணவரிடம் இருந்து என் மகள்களை காப்பாற்றவே அவர்களை கொலை செய்தேன் என்றார்.
ரஜினி தம்பதி அண்மையில் தான் மகாராஷ்டிராவில் இருந்து ஹைதராபாத்திற்கு வந்துள்ளனர்.
No comments
Thank you for your comments