Breaking News

ஹெல்மெட்டை தாக்கிய பவுன்சர் பந்து: பாகிஸ்தான் வீராங்கனைக்கு எலும்பு முறிவு!

சென்னை, மார்ச் 18-
மகளிர் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை ஜவேரியா கான் பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்ததால் மைதானத்தில் பதற்றம் ஏற்பட்டது.
 
மகளிர் டி20 உலகக்கிண்ணப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- பாகிஸ்தான் அணிகள் மோதிய
ஆட்டம் நேற்று முன் தினம் நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்த லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த போட்டியில் போது பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும் போது அந்த அணியின் தொடக்க வீராங்கனை ஜவேரியா கான் (27), பவுன்சர் பந்து தாக்கி காயமடைந்தார். 

மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் ஷமிலியா கானெல் பவுன்சராக வீசிய ஒரு பந்து, ஜவேரியா கானின் கையை பதம் பார்த்தது. பிறகு ஹெல்மெட்டையும் கடுமையாக தாக்கியது. இதில் ஜவேரியா கான் மைதானத்திலே நிலைகுலைந்து விழுந்தார். பின்னர் உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். 

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவரது கை பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒருநாள் சிகிச்சைக்கு பிறகு ஜவேரியா கான் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

No comments

Thank you for your comments