வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா, இல்லையான்னு தெரியணுமா?: 1950க்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க
சென்னை, மார்ச் 10-
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் உள்ளதா, இல்லையா என்பதை தெரிந்து
கொள்ள வாக்காளர்கள் 1950 என்ற எண்ணிற்கு வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன்
எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அந்த செல்போன்
எண்ணிற்கு தேர்தல் ஆணையம் பதில் அனுப்பும்
அந்த பதிலில் வாக்காளரின் பெயர், முகவரி, வாக்குப்பதிவு மையம் உள்ளிட்டவையின் விபரம் இருக்கும்.
தேர்தல் நாள் அன்று தங்களின் வாக்குச்சாவடியில் எவ்வளவு கூட்டம்
இருக்கிறது என்பதையும் 1950 என்ற எண்ணுக்கு கியூ என்று டைப் செய்து
எஸ்.எம்.எஸ். அனுப்பி தெரிந்து கொள்ள முடியும். கியூ என்று டைப் செய்து
அனுப்பினால் வாக்குச்சாவடியில் எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள் என்ற
விபரம் உடனடியாக எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பி வைக்கப்படும் என்றார்.
No comments
Thank you for your comments